Our Services
அஸ்ட்ரோ நியூமராலஜி - எண்கணிதம் விளக்கம்
பெயர் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் ஆயுள் முழுவதும் அவரை குறிப்பிடுகின்ற மிக முக்கியமான அடையாளம் ஆகும்.உச்சரிப்பு என்பது ஒலி அலைகளின் அதிர்வாகும்.ஒலி அலைகளின் மாறுபட்ட அதிர்வுகளே நமக்கு மொழி என்பதன் அடையாளமாக காதில் உணரப்படுகிறது.
எந்தக்குழந்தையின் பெயரையும் நீளமாக வைத்துவிட்டு, பின்னர் அதை சுருக்கிக்கூப்பிடுவதால் பலன்கள் கண்டிப்பாய் மாறுபடும். உதாரணத்திற்கு, ரவிச்சந்திரன் என்று வைத்து விட்டு ரவி அந்த பெயர் உச்சரிக்கப்படுவதல் நிச்சயமாக பலன்கள் மாறும்.
மேலும்,ஒரு குழந்தைக்கு,அது வளரும் வரையில் தாய்,தந்தை கூட இனிஷியலுடன் பெயரை உச்சரிப்பதில்லை.எனவே இனிஷியல் இல்லாமலே முதலில் பெயர் நன்றாக அமைய வேண்டும்.இனிஷியல் இல்லாமல் உச்சரிக்கப்படும்போதே அதிர்வுறும் ஒலி அலைகள் குழந்தைக்கு நன்மைகள் செய்யவேண்டும்.பின்னர் அக்குழந்தை பட்டப்படிப்புக்குப்பின் ஒரு உயர்ந்த பதவியில் இருக்கலாம்,அல்லது சிறந்த தொழில் அதிபராக ஆகலாம்.அப்போது கையெழுத்து நிறைய போடும்போது அதிர்வுறும் ஒலி அலைகள் மீண்டும் மாறுபட்ட பலன்களை தரத்தொடங்கும்.
பெயர் உச்சரிப்பினால் நல்ல பலன்கள் மட்டுமே நடைபெறும்.பெயர் வைக்கப்படும்போது எண்கணித முறை மட்டுமே முழுப்பலன்களையும தர முடியாது.அவர்களின் ஜெனன ஜாதகத்தை கண்டிப்பாக ஆராய்ந்து தான் பெயர் வைக்கப்பட வேண்டும்.
அதிர்ஷ்டம் தரும் ராசிக்கற்களை பற்றி தெரிந்து கொள்ள ->>